Saturday 13 December 2014

ஒரு நாள் :

சின்னஞ்சிறு வயதினிலே :-)

 ஒரு நாள் :
  இன்னும் இரண்டு நாள் மீதம் இருந்தது, ஜனவரி 26 அன்று  பள்ளி (கொடுவாய் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ) ஆண்டு விழா விற்கு "படுகர் நடனம் " (நீலகிரி மலை வாழ் மக்களின் பாரம்பரிய மொழி ) பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் . தமிழாசிரியர் திரு. குமார்  அவர்கள் என்னை கூப்பிடுவதாக நண்பன் சொன்னான். நான் எந்த தப்பும் பண்ணலையேன்னு மனசுல யோசிச்சுட்டே அவரை பார்த்த போது , இந்த நாடகத்திற்கு ("திருவிளையாடற் புராணத்தில் வரும் , சிவ பெருமான் கால் மாறி ஆடிய படலம்") வாயிற்காவலனாக நடிக்கும் படி, வசனத்தை( ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட ராஜ  கம்பீர , ராஜ குல திலகம் , ராஜசேகர பாண்டியன் வருகிறார்.... பராக் பராக் ...) எழுதி கையில் கொடுத்து விட்டார் .   

     இரண்டு வரி தானே மனபாடம் பண்ணி நடுச்சரம்லாம்னு நெனச்சேன். அன்று மதியம் நாடக ஒத்திகை பள்ளி முதல்வர் முன்பு நடந்தது.

   ஒத்திகை முடிந்த சிறிய நேரத்தில் மீண்டும் தமிழாசிரியர் அழைத்தார், எட்டு 8 பக்கத்தை என் கையில் கொடுத்து படித்து பார்க்க சொன்னார் ,. அட இது நம்ம ராஜா வோட வசனங்கள் சார் னு  சொன்னேன். ஆமா நாளை மறுநாள் நடக்குற ஆண்டு விழா- ல நீதான் இந்த ராஜா வா நடிக்க போற னு சொன்னார். 
   எட்டு பக்க வசனங்கள பாத்துட்டு ,என்னால முடியாதுங்க சார் னு சொல்லிட்டேன். ட்ரை பண்ணி பாருன்னு சொல்லி கிளாஸ் க்கு போக சொல்லிட்டார். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரல, படுச்சா  மனசுல ஏறல. அடுத்த நாள் , மீண்டும் ஒத்திகை பள்ளி முதல்வர் முன்பு , இன்னும் ஒரு நாள் மட்டும் மீதம்   இருந்தது. 

    கூட்டத்தை பார்த்ததும் படிச்ச வசனங்கள் எல்லாம் மறந்துருச்சு, ஒத்திகை இன் போது எனது வசனங்கள் அனைத்தும் தமிழாசிரியரே வாசித்து விட்டார் . ஒத்திகை முடிந்த பின்பு என்னை நல்லா திட்டுவார்னு நெனச்சேன் ஆனா என்கிட்ட வந்து நல்லா  நடுச்சேன்னு சொன்னார் . நாளைக்கு நடக்குற ஆண்டு விழா ல நல்லா பண்ணிருன்னு சொல்லிட்டார் . என்னால முடியாதுங்கனு சொன்னேன் , ஒரு பத்து நிமிஷம் என்கிட்டே தனியா  பேசினார். நீ மொதல்ல ராஜ சேகர பாண்டியன ஒரு கேரக்டரா பாக்காத , ராஜ சேகர பாண்டியனா நீ மாறு ., உன் மனசுல அந்த கேரக்டர ஆழமா பதிய வை , நாளைக்கு நாடகம் முடியற வரைக்கும் நீ, நீ இல்லை "ராஜ சேகர பாண்டியன்" ஆ வாழு நு சொன்னார் . 

     அடுத்த நாள் மாலை 6 மணிக்கு ஆண்டு விழா ஆரம்பம் ஆய்ருச்சு . எனது நாடகத்திற்காக நான் மேடை ஏறும்போது சரியாக மணி 7, 
கம்பீரமான நடையுடன் , " அமைச்சரே , நாடும், வீடும், நகரும் நலம் தானே ? , மக்கள் சுகமா ? , மாடு கன்றுகள் சுகமா ?, மாதம் மும்மாரி பொழிகின்றதா .?., எனது வினாக்களுக்கு விடை பகிருங்கள் .." னு  ஆரம்பிச்சு வெற்றிகரமா முடுச்சுடேன்.

     தமிழாசிரியர் குமார் நாடகம் முடியும் வரை நீ ராஜ சேகரனா வாழு நு சொன்னார். ஆனால் இன்னும் அந்த ராஜ சேகர பாண்டியன் இதயத்தின் ஓரத்தில் இன்னும் சாகாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.  நன்றி தமிழாசிரியர் திரு .குமார் அவர்கள்.

ஞாபங்களுடன் ..
♥SenthilBalaji♥