Friday 18 September 2015

மன யுத்தம் :
"எவர் கண்களுக்கும் தெரிவதில்லை , இந்த போரும் போர்க்களமும் ..உந்தன் காதலும் , காதல் கொண்ட என் மனமும் ..
காதலுடன் 
S BALAJI





அடைக்கப்படும் அசைவுகள் ,
உச்சத்தை தொடும் போது,
அசைவுகள் மெல்ல ஆடுகிறது..,
"உளியில்.....",
அசைவுகள் சிலையில் அடைபடும் வரை...
நானும் ஒரு ரவி வர்மன் தான் 
என்னுள் உன்னை 
அழகாய் வரைகின்ற பொழுதுகளில் ..♥

பிடித்தது

















பிடித்தது 
smile emoticon
"தாய் சொன்ன தாலாட்டு ..
தலைமுறையா., தமிழ்மறையா ..,
முல்லையே கேளு ..
மூவேந்தர் பாட்டு ...
நீர் தூங்க , நிலம் தூங்க ..,
கொடி தூங்க ., செடி தூங்க ..
தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு ..,
நிலா காயும் நேரம் தானே ,
மடி மீது தூங்க
பொற்சேவல் கூவும் வரையில் ..
கண் காணாமல்
ராக்கோழி கத்தும்
அர்த்த ராத்திரி ..
பூ மடல் மீது
பனி தூங்கும்
முள் மாதிரி ..
வாய் பக்கம்
தீபம் ஏற்றி
வாசல் வந்த
மின்மினி ..
இளம் காலை
குயிலும் கூவ
எழுப்பாதே
சின்னக் கண்மணி ..."
By
SenthilBalaji.

♥திருவள்ளுவரின் காதல் க(விதை) ♥♥:

திருவள்ளுவரின் காதல் க(விதை) :
குறள் :

"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 
அஞ்சுதும் வேபாக் கறிந்து." 
பொருள் :
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
இவண்
செந்தில் பாலாஜி 

அவளிடம்
அதிகமாக பேச
துவங்கி உள்ளேன்.,
கோவப்படுவதில்லை ....
பசியாரியதை கேட்கிறேன்.....
அன்று என் கனவில்,
" தாலாட்டு
பாடியவளுக்கு,
நான் அழுத
ஒப்பாரிக்கு பின்..."
BySenthilBalaji


"புதைக்கப்பட்ட
கல்லறையில்
எழுந்து ...
முதுமை,
இளமை 
குழந்தையாக
கருவறை செல்கிறது
"கனவு"..
இவண் ,
செந்தில் பாலாஜி



நிலவுக்கு கை 
முளைத்து ,
பூமியில் எழுதப்பட்ட 
அழகிய கவிதை 
"அவள்" ...

♥SB♥
காற்றை ஆளும் 
இசை நீ ..♥



கலித்தொகையின் 
ஆறாம் பிரிவாய் 
"பால் வீதி "
அவள் விழிகளின் 
மௌன மொழிகளில் 
இருந்து ... 

♥SB♥
கோடி நட்சத்திரங்களில் ஒற்றை நிலவு  டி நீ ...♥
♥SB♥


















என்ன ஆனதென்று தெரியவில்லை ,
சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு
சற்றே தயங்குகிறான்,,
சந்திரனும் சாயும் காலத்தில்
சீக்கிரம் வந்து விடுகிறான் ...
இருவரையும்
கிழ மேற்கு திசைகளில்
ஒருசேர காண்கிறேன் ..
அவள் வீட்டு வாசல் கோலத்தில்
கார்த்திகை பெண்ணாக
கார்த்திகை தீபமிட வருவாள்,
ஒருவேளை ,
அவளைக் காண்பதற்காகவோ ????

கத்தி சண்டை கற்றுக்
கொண்டு இருக்கிறேன் .....
விண்மீன்களின் அடியாட்கள்,
மண்கல வீரர்களாய் ...
"மண்வெளி"க்கு புறப்பட
தயாராகி கொண்டிருக்கிறது
அந்த "மண்கலம்"...
பூமியினில் தங்களை விட
பிரகாசமாய் ஒன்று மின்னுவதை
ஆராய்வதற்காக...
மண்கல வீரர்கள் "அவளை"
களவாடி சென்றுவிட்டால் !!...!!
ஆதலால் ....
கத்தி சண்டை கற்றுக்கொண்டு இருக்கிறேன் .....
By
Senthil Balaji



விண்ணில் இருந்து
வழி மாறியதா ..
இல்லை,
நீரில் இருந்து 
தவறி வந்ததா ...??
இந்த மீன்கள்,
காற்றினில்
துள்ளி விளையாடுகிறது .....
என்னவள் கண்களில் ...
By
♥SB♥


வரும் காலம் :
வற்றிவிட்ட வியர்வைத் துளிகளும் 
வியர்வை அழுக்கேறிய தாலிக் கயிறும்
வானம் பார்க்கையில்,
மண்ணில் கசிகின்றது
இந்த உரம்பு நீர்.....
கனவில் ..
By
SB
சதை மூட்டைக்குள் 
சவமாய் கிடக்கிறது 
சொல்லப்படாத என் 
காதல் ..♥
எனது கண்களுக்கு 
"புன்னகைக்க "
சொல்லி கொடுத்தவள் ..♥

♥SB♥
   
     


  கோவை - பொள்ளாச்சி சாலை ., வாகனத்தை இயக்குவது என்பது இந்த சாலை யில் சற்றே சிரமம் தான் ., 40 km வேகம் தாண்டுவதில்லை நான் ..
மூன்று நாள் முன்பு இரவு 8 மணி இருக்கும் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து கிடந்தார் ., அருகில் சென்று பார்த்த போது தன் வண்டியில் சில அன்றில் பறவைகளையும் (love birds), வண்ண மீன்களையும் கொண்டு செல்லும் போது நெருக்கடி யான இடத்தில தவறி விழுந்து விட்டார்.. அவருக்கு ஒன்றும் இல்லை ... ..
நான் எனது வண்டியை நிறுத்தி விட்டு , பறவை கூட்டை பார்த்தேன் . ஒரு பறவையின் கால் கூண்டின் கம்பிகளில் சிக்கி அப்பறவை அசைவற்று கிடந்தது .,
சிறிது அதிர்ச்சி யுடன் நான் உற்று பார்கிறேன் ., கூண்டினுள் இருக்கும் ஜோடி பறவையும் அதே அதிர்ச்சி யுடன் ...
பறவையின் காலை கம்பி இன் இடுக்குகளில் இருந்து மெல்ல எடுத்தேன் ..
!!!!!!
!!!!!!!
நல்ல வேளை அப்பறவை பறக்க தொடங்கியது, அதிர்ச்சியுடன் இருந்த அந்த ஜோடி பறவை யுடன் சேர்ந்து காதலுடன் ...
by
SenthilBalaji..


இன்று நூறாவது நபரை .... smile emoticon
ஒன்னும் இல்லீங்க .. இப்பெல்லாம் டீ கடைல அரை கிளாஸ் க்கு டீ யும் , மீதி நொரை யும் தராங்க ,,, அதான் டீ கடைக்கு போனா " மாஸ்டர், டீ - ல நொரை இல்லாம , கிளாஸ் நெறையா ஒரு முழு டீ கொடுங்கநேனு", கடைசி ரெண்டு மாசமா கேட்டுட்டு இருக்கேன் .. இத கேக்கும் போது டீ மாஸ்டர் பாதி பேரு சந்தோசமா சிரிக்கறாங்க அப்பு ... அதான் இன்னைக்கு நூறாவது டீ மாஸ்டர் சிருச்சுபுட்டாரு.. வேற ஒன்னும் இல்லீங்க ...
SB ..

எத்தனை நாள் தவம் ??



எத்தனை நாள் தவம் ??

உனது நெற்றி
காது , இதழ்கள்
மற்றும்
கழுத்தை
தழுவுகிறது
"இம்மழை "..♥

♥SB♥

தவமி



கோடை தாகத்திற்கு 
உனது "முத்தங்களில்" 
தாகம் தீரும் என்றால் 
வெயிலை வேண்டி
தவமிருப்பேன் ...


♥SB♥

       

 "Small plants withstand with high velocity of wind nor flood, by means of it may turn in all dynamic positions but not yet rupture down, still towards to the top for their survival - human life".  SB smile emoticon

உந்தன் மூக்குத்தி 
வெளிச்சத்தை 
கிரகித்துக்கொள்ள 
காத்திருக்கின்றன 
நட்சத்திரங்கள் ..

♥SB♥


மழை தூரல்களில் 
நீந்துகின்றது 
உந்தன் கண் மீன்கள் ..♥

♥SB♥
என்ன சொல்ல வந்தாய் 
மழையாக ...♥
Nothing To Be Originated Everything To Be Derived...

♥SB♥
யாரை தூங்க வைக்க 
இந்த மழையின் 
தாலாட்டு ...!!

சப்தம்

விசித்திரமாய் 
அந்த சாலையின் 
இரைச்சல் சத்தங்களை 
மட்டும் கவனித்து வந்தேன் ..
பேரிரைச்சல் மத்தியில் 
அந்த "ஒற்றை பாதம்" 
மட்டும் அமைதியாய் ..

♥SB♥

இனித்தல் ..


"நான்கு நாள் முன்பு எனக்கு இரவு 11 மணிக்கு அழைப்பு வந்தது ..
ஹலோ யாருங்க ..?
தம்பி பாலாஜி ..
ஆமாங்க ... நீங்க ..?
நான் யார்னு எதுக்கு உனக்கு ., எனக்கு கல்யாணம் வெள்ளிகிழமை மதியம் மண்டபத்துக்கு வந்துரு ...
என்று உரிமையுடன் சொன்னார் ..
அந்த தொலை பேசி குரலை மூளையில் செலுத்தி யார் என்று பார்த்ததில் "கொடுவாய் சரவணா மெடிக்கல் சரவணன் அண்ணன் "
ஆச்சர்யத்து போனேன் .. 4 ஆண்டுகள் ஆகி இருக்கும் அவரிடம் பேசி .. அவரது திருமண அழைப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியது .. சில நேரம் அவரை கலாய்த்து விட்டு திருமணத்தில் பார்ப்போம் என்று கூறினேன் .

இன்று காலை கொடுவாய் க்கு பைக்கில் கிளம்பி , சரியாக மதியம் 1.30 மணி அளவில் அவினாஷி பாளையம் பக்கத்தில் உள்ள மண்டபத்தை அடைந்தேன்.
மேடைக்கு சென்று மணமக்களுக்கு திருமண வாழ்த்து சொன்னேன்.. வாழ்த்துக்கு நன்றியுடன் " உனக்கு எப்போ பாலாஜி கல்யாணம் ?" என கலாய்க்க ஆரம்பித்தார் மணமகன் ... வெட்கப்பட்டுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கும் போது ..
எனது பள்ளி தமிழ் ஆசிரியர் திரு குமார் அய்யா அவர்கள் மேடை ஏறினார்கள் .. அதிசயித்துப் போனேன் மகிழ்ச்சி யுடன் வணங்கி இருவரும் நலம் விசாரித்தோம் ...
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம் ..நிறைய பேசிக்கொண்டு இருக்கையில் பள்ளியின் தாளாளர் துரை ஜி அவர்களும் வந்தார் நலம் விசாரித்தோம் .. திருமண விழா விற்கு பின் பால்ய சிநேகிதர்களை சந்தித்து விட்டு மகிழ்ச்சியாக பொள்ளாச்சி வந்தேன் ... ஒரு மகிழ்ச்சியான நாளை அனுபவித்த மகிழ்ச்சியில் ..."""
--செந்தில்பாலாஜி ...
தமிழ் ஆசிரியர் திரு குமார் அவர்களுடன் ...

இன்னும் அந்த 
கடல் அலை 
கரை சேரவில்லை.. 
உனது கண்களை நோக்கி 
தவம் செய்ததிற்கு 
வதம் செய்கின்றாய் 
அதே கண்களில் ..♥
அந்த வானவில்லின் வண்ணங்களை திருடி விட்டாய் நீ....!!! 

♥SB♥
அந்த கண் மீனுக்கான 
தூண்டிலை 
சரி செய்கின்றேன் ..




காற்றின் ஒவ்வொரு துகள்களும் 
உனது இதய கூட்டினுள் 
உறங்க 
சண்டை இடுகின்றன, 
நானும் ...!
இரவின் மௌனத்தை 
முறியடிப்பாயோ 
உனது முத்தங்களில் ..!!!!
விழி ஈர்ப்பு விசையை கணக்கிடாமல் சென்றானோ, அந்த நியூட்டன் ....
காதலுடன்.. 
செந்தில்பாலாஜி 



ஆயிரம் லட்சம் 
சிறகுகளை அக்னியில் 
பறக்கவிட்டு...., 
அமைதியாய் உறங்குகிறது 
இந்த ஒற்றை இறகு,
அக்னி சிறகாய்....

பிரார்த்தனை ::



பிரார்த்தனை ::

வனமாண்ட ராமன் 
நாடாள வார ..
மண்ணிழந்த பாண்டவன் 
படை சூழ்ந்து
மீண்டு எழ ...
கருகிய காகிதம்
பச்சை மரமாய்
தழைத்து எழ ..
"கல்கி" அவதாரம் தாராயோ ...

கல்கி




கலியுகமென நீ 
பயந்தால் ....
எனது முதுகிற்கு 
பின்னால் மறைந்து கொள் .,
கூடுதலாக கண்ணனிடம் 
புதிய கீதையை எழுதி
வாங்கி தருகின்றேன் .,
அர்ஜுனனிடம் வில் அம்பை
வாங்கி தருகின்றேன் .,
நீ "கல்கி" அவதாரம் தாராயோ ....

--செந்தில்பாலாஜி.

Tuesday 8 September 2015
























நீ ஏன்
கால் நனைத்தாய் 
கடல் நீரில் ..?

தவமாய் தவமிருந்து 
காற்றினில் கலக்கின்றது.... 

உன்னை பார்பதற்கு 
மழைத் துளிகளாய் ..

♥SB♥