Thursday 28 May 2015

பீலா .. ;-)





பீலா  ..  ;-)

  நண்பனின் மூத்த சகோதரிக்கு மாப்பிள்ளை பார்பதற்காக  என்னை அழைத்தான் . அன்று அவனுக்கு தொழில் ரீதியாக வேலை இருந்ததினால் நான் மட்டும் அவன் பெற்றோருடன் சென்றேன். இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்  காலை எட்டு மணிக்கே அந்த கோவிலை அடைந்தோம் . 

 மாப்பிள்ளை  வீட்டார்க்காக , காரம் இனிப்பு மற்றும் குளிர்பானம் போன்றவைகளை தயார் செய்தோம். மாப்பிள்ளை வீட்டார் இதோ ..இதோ..என்று சரியாக மதியம் 12 மணிக்கு அம்பாசிடர் காரில் வந்து சேர்ந்தனர்.

  வணக்கங்களுடன் , இனிப்பும் காரமும் பரிமாறப்பட்டன .. மாப்பிள்ளையுடன் பேசுமாறு சகோதரி என்னிடம் சொன்னவுடன், நான் அவரிடம் உரையாடலை தொடங்கினேன் ...
 

   மாப்பிள்ளைக்கு 30 வயது இருக்கும் ,, புன் சிரிப்புடன் என்னை அறிமுகபடுத்தி கொண்டேன் .  கல்வி தகுதி பட்டய படிப்பு என்றும் , தற்போது சொந்தமாக தொழில் செய்கிறேன் என்றார் . வாழ்த்துக்களுடன் எனது கல்வி தகுதி மற்றும் பணிபுரியும் இடம் பற்றி சொன்னேன் .

   சம்பளம் எவ்வளவு என்று கேள்வியை முந்தினார்.. நான் ஐந்து இலக்கத்தில் நடு நிலையான சம்பளம் என்று பதில் முடிப்பதற்குள் , 
நான் செய்யும் தொழிலில் மாதம் மிச்சம் மட்டும் ஆறு இலக்கத்தை தாண்டும் என்றார் ...

   கடின உழைப்பு இல்லை , அமர்ந்து கொண்டு வேலை செய்வது தான்  என்றார் . 

அத விடுங்க ...

""கல்யாணம் பத்தி என்ன நினைக்கறீங்க ?? மனைவி எதுக்காக ஒரு ஆணோட வாழ்க்கையில் தேவை ??  கல்யாண வாழ்க்கை பத்தி சொந்தமா எதாவது நியதி (marriage  ethic ) எதாவது உங்களுக்கு இருக்கா நு கேட்டேன் ????  

அதற்கு அவர் ,

"எல்லோரும் கல்யாணம் பண்றாங்க அதனால பண்றேன் , ethic எல்லாம் எதுவும் இல்லைன்னு சிறு பிள்ளை தனமாக பதில் சொன்னார் .." 

எப்படியோ பேச்சை முடித்து கொண்டு சகோதரியிடம் இந்த மாப்பிள்ளை உங்களுக்கு புடுசுருக்கா கா .. என்று என் கேள்வியை முடிப்பதற்குள் ...

"" அப்றோம்... பொண்ணு  வீட்ல நகை எவ்ளோ போடுவீங்க ... என்ன கார் வாங்கி தருவீங்க னு ஒரு வயதான குரல் சத்தம் சத்தமாக ஒலித்தது .""

 மாப்பிள்ளைக்கு 60 சவரன் நகை வேணுமாம் .. swift  கார் latest model  வேணுமாம் .. தனி குடித்தனத்துக்கு தேவையான சீர் வரிசை வேணுமாம் ...

 கோபங்களை வெளி காட்டாமல் புன்னகைத்த படியே என்னிடம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தேன் .

   " மாதம் ஆறு இலக்க தொகை மிச்சம் பிடிக்கும் ஒரு ஆண் மகனால் , தனது திருமண வாழ்க்கைக்கு தேவையான வற்றை சம்பாதிக்க முடியவில்லையா ???

  " மனைவி என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத இந்த சதை மூட்டைக்கு 60 சவரன் நகையுடன் மனைவி என்பவள் , தேவையா ???""

திருமணம் பற்றி பக்குவம் இல்லாமல், திருமணம் அவசியமா ???

  மனைவி வீட்டின் உழைப்பில்.. சொகுசாக வாழ அழகிய வியாபாரமா திருமணத்தை உரு மாற்றி விட்டவர்கள் யார் யார் என்று சிந்தனை சிதறியது ...

  இந்த மாப்பிள்ளை சொன்னது அனைத்தும் ""பீலா " .."பீலா "" நம்பாதீங்கோ னு"" , அந்த பழைய அம்பாசிடர் கார் மட்டும் உறுமிக்கொண்டே அவர்களை ஏற்றிக்கொண்டு  வந்த வழியே திரும்பியது ....

உண்மைகள் 
பை ,,
செந்தில்பாலாஜி ...




  
  

Saturday 23 May 2015








 சின்னஞ்சிறு வயதினிலே :-)

குல்பி  : 
           
    சாய்ங்காலம் ஸ்கூல் ல இருந்து  வந்ததும் சைக்கிள் டயர் வண்டி ஓட்டிட்டு ஊற ஒரு ரௌண்டு வந்துட்டு தான் மத்த வேல ..  ராத்திரி 8 மணி வரைக்கும் விளையாடுவோம்  வேர்வை  நனஞ்ச சட்டய வீட்டுக்கு கொண்டு போனா அடி விழும் ... இதுல பக்கத்து ஊர் சூலக்கல் ல சினிமா சூட்டிங் அடிக்கடி நடக்கும் .. வீட்ல இருந்து சொல்லாம ஊர் பசங்க கிளம்புவோம் ! 

    " தேவர் மகன் " படம் இங்கதான் எடுத்தாங்கநு சிவாஜிகணேசன்  பையன்  பிரபு "பாஞ்சாலங்குறிச்சி"  படம் சூடிங்க்கு "ஒத்தபனைக்கு"  (பொள்ளாச்சி பக்கம் ) வந்தப்போ தாத்தா நெறைய சொன்னாரு ..  "சிலம்பாட்டம் " சூட்டிங் அப்போ, அய்யனார் செட் க்கு, பிரபு, சிம்பு கூட அதே இடத்துக்கு வந்தப்போ நினைவுள வந்துது ...

   இன்னும் சொல்ல போனா சந்தோசமான நாள்னா ஞாயித்துக் கிழமை தான் . பாட்டி துணி தொவைக்க ஆத்துக்கு போகும் . நாங்க எல்லோரும் மீன் புடுச்சு விளையாடுவோம் , மீன் குட்டிகல பாத்திரங்களில் போட்டு வழத்துவோம், பெருசாச்சுனா வீட்டு கிணத்துல போடுவோம். பாத்திரம் கழுவ கிணத்துல தண்ணி இறைக்கும் போது  மீன் குஞ்சுகள் வரும், அப்போ பாட்டி கிட்ட திட்டு வாங்கறது செமையா இருக்கும் .. 

    ஊருக்குள்ள நாலஞ்சு வீட்ல தான் டிவி இருக்கும் ,, புது படம் கேசட்ல போடுவாங்க பக்கத்து  வீட்ல ஊர் பசங்க அத்தன பெரும் அங்கதான் இருப்போம் .

     நொண்டி , கில்லி, குண்டாட்டம் , சீட்டு விளையாட்டு , ட்ரைன் ஓட்டி விளையாடறதுநு ஊரே அமர்க்களமா இருக்கும் . 

   இப்பெல்லாம் இந்த மாதிரியான "குழந்தைகள் "சூழ்நிலைக்கு சுவடே இல்லாம போயிருச்சு ..  சில நேரங்கள்ல இத நினைக்கும் போது என் அடுத்த தலைமுறைக்கு எதுவும் மிச்சம் வைக்கலைன்னு கஷ்டமா இருக்கும் . 

ஆனா ரெண்டு வருசமா இந்த சுவடுகள மீட்டு எடுக்கும் விதமா " பொள்ளாச்சி இலக்கிய வட்டம் குழந்தைகள் கலை கொண்டாட்டம் " நிகழ்ச்சில தொலைந்து போன கிராமத்து விளையாட்டுகள மீட்டு கொடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.  

   அதுவும் இந்த வருஷம் , பொம்மலாட்டம் நிகழ்ச்சி சூப்பர் ..! 

    குழந்தைகள் பெரியவங்கன்னு சுமார் 300 பேர் வந்தாங்க .. தோழர் பூபாலன், அவர்கள்  வீட்ல எல்லோருக்கும் சமச்சு எடுத்துட்டு வந்திருந்தாரு  . பூபாலன் துணைவியார் அவர்கள் , சாப்பாடு நல்லா  இருக்கானு சந்தோசமா  கேட்ட போது , சமூகத்திற்காக இவர்களின் உழைப்பும் , அர்பணிப்பு உணர்வும் ஆழமாக உணரப்படுகிறது.  வாழ்த்துக்கள் ங்க :-) 









பழமையை மீட்டு எடுப்போம் ...
நன்றிகள் 

இவண் 
செந்தில்பாலாஜி ..