Thursday 28 May 2015

பீலா .. ;-)





பீலா  ..  ;-)

  நண்பனின் மூத்த சகோதரிக்கு மாப்பிள்ளை பார்பதற்காக  என்னை அழைத்தான் . அன்று அவனுக்கு தொழில் ரீதியாக வேலை இருந்ததினால் நான் மட்டும் அவன் பெற்றோருடன் சென்றேன். இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்  காலை எட்டு மணிக்கே அந்த கோவிலை அடைந்தோம் . 

 மாப்பிள்ளை  வீட்டார்க்காக , காரம் இனிப்பு மற்றும் குளிர்பானம் போன்றவைகளை தயார் செய்தோம். மாப்பிள்ளை வீட்டார் இதோ ..இதோ..என்று சரியாக மதியம் 12 மணிக்கு அம்பாசிடர் காரில் வந்து சேர்ந்தனர்.

  வணக்கங்களுடன் , இனிப்பும் காரமும் பரிமாறப்பட்டன .. மாப்பிள்ளையுடன் பேசுமாறு சகோதரி என்னிடம் சொன்னவுடன், நான் அவரிடம் உரையாடலை தொடங்கினேன் ...
 

   மாப்பிள்ளைக்கு 30 வயது இருக்கும் ,, புன் சிரிப்புடன் என்னை அறிமுகபடுத்தி கொண்டேன் .  கல்வி தகுதி பட்டய படிப்பு என்றும் , தற்போது சொந்தமாக தொழில் செய்கிறேன் என்றார் . வாழ்த்துக்களுடன் எனது கல்வி தகுதி மற்றும் பணிபுரியும் இடம் பற்றி சொன்னேன் .

   சம்பளம் எவ்வளவு என்று கேள்வியை முந்தினார்.. நான் ஐந்து இலக்கத்தில் நடு நிலையான சம்பளம் என்று பதில் முடிப்பதற்குள் , 
நான் செய்யும் தொழிலில் மாதம் மிச்சம் மட்டும் ஆறு இலக்கத்தை தாண்டும் என்றார் ...

   கடின உழைப்பு இல்லை , அமர்ந்து கொண்டு வேலை செய்வது தான்  என்றார் . 

அத விடுங்க ...

""கல்யாணம் பத்தி என்ன நினைக்கறீங்க ?? மனைவி எதுக்காக ஒரு ஆணோட வாழ்க்கையில் தேவை ??  கல்யாண வாழ்க்கை பத்தி சொந்தமா எதாவது நியதி (marriage  ethic ) எதாவது உங்களுக்கு இருக்கா நு கேட்டேன் ????  

அதற்கு அவர் ,

"எல்லோரும் கல்யாணம் பண்றாங்க அதனால பண்றேன் , ethic எல்லாம் எதுவும் இல்லைன்னு சிறு பிள்ளை தனமாக பதில் சொன்னார் .." 

எப்படியோ பேச்சை முடித்து கொண்டு சகோதரியிடம் இந்த மாப்பிள்ளை உங்களுக்கு புடுசுருக்கா கா .. என்று என் கேள்வியை முடிப்பதற்குள் ...

"" அப்றோம்... பொண்ணு  வீட்ல நகை எவ்ளோ போடுவீங்க ... என்ன கார் வாங்கி தருவீங்க னு ஒரு வயதான குரல் சத்தம் சத்தமாக ஒலித்தது .""

 மாப்பிள்ளைக்கு 60 சவரன் நகை வேணுமாம் .. swift  கார் latest model  வேணுமாம் .. தனி குடித்தனத்துக்கு தேவையான சீர் வரிசை வேணுமாம் ...

 கோபங்களை வெளி காட்டாமல் புன்னகைத்த படியே என்னிடம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தேன் .

   " மாதம் ஆறு இலக்க தொகை மிச்சம் பிடிக்கும் ஒரு ஆண் மகனால் , தனது திருமண வாழ்க்கைக்கு தேவையான வற்றை சம்பாதிக்க முடியவில்லையா ???

  " மனைவி என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத இந்த சதை மூட்டைக்கு 60 சவரன் நகையுடன் மனைவி என்பவள் , தேவையா ???""

திருமணம் பற்றி பக்குவம் இல்லாமல், திருமணம் அவசியமா ???

  மனைவி வீட்டின் உழைப்பில்.. சொகுசாக வாழ அழகிய வியாபாரமா திருமணத்தை உரு மாற்றி விட்டவர்கள் யார் யார் என்று சிந்தனை சிதறியது ...

  இந்த மாப்பிள்ளை சொன்னது அனைத்தும் ""பீலா " .."பீலா "" நம்பாதீங்கோ னு"" , அந்த பழைய அம்பாசிடர் கார் மட்டும் உறுமிக்கொண்டே அவர்களை ஏற்றிக்கொண்டு  வந்த வழியே திரும்பியது ....

உண்மைகள் 
பை ,,
செந்தில்பாலாஜி ...




  
  

0 comments:

Post a Comment