Tuesday 2 June 2015

நான்கும்(4) ... நீங்களும்....




நான்கும்(4) ... நீங்களும்....

   இது வேறொரு பரிமாணம். எனது முதல் கட்டுரை ஜோதிடத்தில் ...

    மனம் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மாய உறுப்பு (imaginary organ ). ஜோதிடத்தில் இந்த மாய உறுப்பை லக்னத்தில் இருந்து நான்காம் இடமாக கருதுகிறோம்.

    மனித வாழ்வில் இன்றியமையாதது எனது ஒவ்வொருவரின் விருப்பங்கள் , அதனால் ஏற்படும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் ஒருவரின் வாழ்வியலை தீர்மானிக்கின்றது .

  முதலாவதாக , ஒரு மனித உயிர்க்கு தனது அறிவு மற்றும் உயிரினால் ஏற்படும் ' "மன மகிழ்ச்சியை" லக்னத்தின் பலம் மற்றும் இலக்கின அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .

இரண்டாவதாக , தனது குடும்பம், வாக்கு தனம் போன்றவைகளால் ஏற்படும் "மனமகிழ்ச்சியை" இரண்டாம் இடமும் அதன் அதிபதியும்  ,

   தைரியம்  வீரியம் சகோதரம் போன்றவைகளால் ஏற்படும் "மனமகிழ்ச்சியை" மூன்றாம் இடமும் அதன் அதிபதியின் நிலையும் ,

 குழந்தைகள் மற்றும் குல தெய்வத்தின் மூலம் பெரும் "மன மகிழ்ச்சியை" ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியின் பலம் வைத்தும் ,

 எதிரிகளின்மையினால் மற்றும் தனது மனைவி அல்லது கணவன், இவர்களினால் ஏற்படும் "மன மகிழ்ச்சியை" முறையே ஆறு மற்றும் ஏழாம் பாவமும் அதன் அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .

  தனது உடல் மற்றும்  தந்தை , பாக்கியங்கள் போன்றவற்றில் இருந்து பெறப்படும் "மன மகிழ்ச்சியை" முறையே எட்டு மற்றும் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .
 
  தொழில் மூலம் மற்றும்  லாபங்களின் மூலம் பெறப்படும் "மன மகிழ்ச்சியை" முறையே பத்து  மற்றும் பதினொன்றாம் பாவமும் அதன் அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .

விரயத்தினால் ஏற்படும் "மன உளைச்சல்களுக்கு" 12ஆம் பாவம் மற்றும் அதன் அதிபதியின்  நிலை பொருது அறியலாம் . 

  "ஆக , மேற்கூறிய அத்தனை மன மகிழ்ச்சிக்கும், மனம் என்னும் மாய உறுப்பு தொடர்பு கொண்டு உள்ளது. "   
 
     ஒரு ஜாதகரின் பலம் என்பது அவரின் லக்னம் மற்றும் லக்ன அதிபதிக்கு எவ்வளவு பங்கு உண்டோ .. அது போல் நான்காம் இடத்திற்கும் அதன் அதிபதிக்கும் பங்கு உண்டு.

    இதுவரை நான் பயிற்சிக்காக பார்த்த ஜாதங்களில் நான்காம் இடத்தை முக்கியமாக கவனத்தில் கொண்டு பார்த்ததில் பலன் மிக சரியாக வந்தது .

  அது சரி , எல்லோருக்கும் எல்லா நிலைகளும் சரியாக அமைந்து விடுவதில்லை . முக்கியமாக நான்காம் இடமும் , நான்காம் அதிபதியின் நிலையம் சரியாக அமைந்தவர்க்கு  வாழ்வியல் இயல்பாக இருக்கின்றது ..  நான்காம் பாவம் கெட்டு விட்டாலோ அல்லது நீசம் அடைந்து விட்டாலோ  கொஞ்சம் சிரமம் தான் . ஒரு வேளை  நீச பங்கம் அடைந்து விட்டால் மிக சிறப்பு .
   
   நான்காம் இடம் என்பது , ஒரு ஜாதகரின் மனதை மட்டும் குறிப்பதில்லை , அவரின் தாயையும் குறிக்கின்றது ..

   ஆக பொதுவாக அனைவரும் , முக்கியமாக நான்காம் இடமும் அதன் அதிபதியும் பலம் இல்லாதவர்கள் பெற்ற தாயை தெய்வம் போல் வணங்கி வந்தால் அவரின் ஆன்ம பலம் மற்றும் பிரார்த்தனைகள் ஒரு ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்ட செய்யும்.

   ஒரு வேளை தாய் இயற்கை எய்தி விட்டால் அவரின் சமாதி  சென்று அல்லது ஆன்மாவை நினைத்து பிரார்த்திக்கலாம் ..  

வாழ்வியலை வெல்வோம் ...

நன்றியுடன் 
செந்தில்பாலாஜி DME.,


0 comments:

Post a Comment