Thursday 27 August 2015

பயணம் •◘○♦♣♠☺☻♥























பயணம் •◘○♦♣♠☺☻♥

கடவுளின் கழுத்தில் 
சில நேரம் 
தீப ஆராதனை பெறுகிறது 
ஒரு பணத்தால் ஆன மாலை.,
சில மணி துளிகளில் ....
செல்வந்தனிடம் ,
சில மணி துளிகளில் 
கணிகையின் காசு பைகளில் ..
சில மணி துளிகளில் 
யாசிப்பவரிடம் ..
என 
மண்ணுக்குள் புதைபவன் வரை 
அர்ச்சிக்கப்பட்ட அந்த 
பணத்தின் பயணம்.... 

Tuesday 25 August 2015

அநேகமாக இதுவே 
இறுதி சந்திப்பென 
நினைக்கின்றேன் ...
ஆனால் அவளிடம் 
அவள் "மூக்குத்தி "
பற்றி ஏதும் சொல்லவில்லை...
அழகுக்கு அழகு சேர்க்கிறது என ..

Wednesday 19 August 2015

அழகியலே .. ♥

  
அழகியலே .. ♥



  மிகவும் பிடித்தமானவர்களிடம் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை .. ஆம் இந்த தோழியிடம் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள 20 நிமிடங்கள் காத்திருந்தேன் ..!
பெயர் : "கனல்மதி "
"இப்படிக்கு மழை" என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் . ஒன்பதாம் வகுப்பு மாணவி . ஆச்சரியப்பட வேண்டாம் .. !!!!!!
   ஆம் சென்ற சனிக்கிழமை அதிகாலை 2 மணி க்கு தான் வீட்டுக்கு சென்றேன் . அடுத்த நாள் காலை 9 மணிக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட விழா. நான் எழுந்தது காலை 9.15 மணிக்கு . அவசரமாக கிளம்பி சென்றேன் .

      ஆனால் விழாவிற்கு மிக முக்கியமான நபர் வருவதற்கு சிறிது தாமதம் ஆகும் என கூறினார்கள் அதனால் 10.30 மணி அளவில் ஆரம்பம் ஆனது . மிக முக்கியமான நபரை காண நானும் காத்திருந்தேன் அப்படி யாரும் வரவில்லை.
 
     ஆனால் விழா ஆரம்பம் ஆனது , அந்த நபர் கனல்மதி தான் என்பது பின்பு தெரிந்தது.
     எட்டாம் வகுப்பு படிக்கும் போது தனது முதல் கவிதை தொகுப்பான "இப்படிக்கு மழை " என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். அப்போ இவர் எப்போது முதல் கவிதை எழுதி இருப்பார் என்ற கேள்விக்கு இது வரை எனக்கு  விடை தெரியவில்லை ..!!!!!
   இவர் விழாவில் பேச ஆரம்பித்தார். ஆம் இதுதான் எனது கண்மயிர்கள் சிலிர்த்த தருணம் . பக்குவப்பட்ட பேச்சாளரை போல (இவர் பக்குவப்பட்ட பேச்சாளர் தான் ) 5 நிமிடத்தில் உரையை முடித்து விட்டார்
   ஆம்  அப்படி என்ன பேச முடியும் ..
     குழந்தை பருவத்தில் எப்படி கவிதைகள் எழுத முடியும் என்ற கேள்விக்கு " நான் படித்து கொண்டு இருப்பது , அரசு பள்ளி தமிழ் வழி கல்வியில் , ஆக என்னால் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க  முடிந்தது , மேலும் இந்த சமூகத்தை பற்றி எளிதில் புரிந்து கொண்டேன் என்றார் "  அனேக கைதட்டல்கள் ....
   இரண்டாவதாக "பெரியார் இயல்"  பற்றி பேசினார். 13 வயதில் பெரியாரை பற்றி தெரிவதே அறிது .. ஆனால் "பெரியார் இயல்" பற்றி பேசும் போது அந்த எளிமைக்கு உள்ள வலிமைகளை விளக்கி விட்டார்.
    மேலும் இவர் எழுதிய "இப்படிக்கு மழை " என்ற கவிதை தொகுப்பில் 4 அல்லது 5 கவிதைகள் தான் உருப்படியான கவிதையாம் ... அதை இவரே சொல்கிறார் .. ஏன்  என்றால் 5 கவிதைகள் தான் சமூகத்திற்கு  பயன் படுமாம். மீதி கவிதைகள் அழகியலை அழகாக கூறுமாம்.
 " ஒரு தலை சிறந்த சுய விமர்சனம் இது தான் .."

   ஆக இவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்ட மகிழ்ச்சியில் நான் ...
 

   "இப்படிக்கு மழை" கவிதை தொகுப்பை பெற அழைக்கவும் : கவிஞர் கனல்மதி + 91 9842448175..

Monday 17 August 2015

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ...

  எதையோ பார்த்து ஆனந்த பட்டு  முதன் முதலில் சிரிக்கும் குழந்தையாய் .. சிரிக்கின்றேன்  உருமீனாய் உளமாறிப்  போன நான் , முதல் கவிதையில் ...

  ஆனந்த பட்டு சிரித்து 5 மாதம் ஆன பின்பு இப்போது தான் சிரித்ததை எழுத துவங்குகிறேன் நான் ..

  ஒரு (சிறந்த) படைப்பு என்பது ஒட்டு மொத்த உலகையோ அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கு , வெற்றிக்கு , உயிர்த்தலுக்கு.. உதவுமெனில்  சான்றே வேண்டாம் ,. அது தலை சிறந்த படைப்பு தான் .!




   ஆம் , உயிர்த்தலுக்கு உதவும் கவிதை கண்டறியப்பட்டால்  அப்பக்கத்தை மடித்து விடுவது என முடிவு செய்தேன் .. தொகுப்பை படித்து முடித்து பார்க்கும் போது, மடிக்கப்படாத பக்கங்கள் பத்தை தாண்டவில்லை .! 

  ஒரு கவிஞனின் மூளைக்குள் கவிதைகள் எவ்வாறு தோன்றியது , ஏன் தோன்றியது, எதற்காக தோன்றியது அந்த கவிதைகள் எழுதப்படும் போது அந்த  பேனா முனை எவ்வாறு தன்னை அர்ப்பணித்து கொண்டது என்பதை சிந்திக்க தூண்டுகிறது .

         " ரௌதிரங்களை உள்ளடுக்கி, ஏக்கங்களை உள்ளடுக்கி,.நம்பிக்கையை உள்ளடுக்கி ,நினைவுகளை உள்ளடுக்கி, இழப்புகளை உள்ளடுக்கி, நீதிகளை உள்ளடுக்கி , காதலை உள்ளடுக்கி,
உண்மைகளை உள்ளடுக்கி ," பறக்க எத்தனித்த இந்த ஒற்றை இறகு, என்னையும் ஏற்றிக்கொண்டு  ஆனந்தமாய் பயணித்து கொண்டு இருக்கின்றது ..  

"ஒரு தனிமையை 
இனிமையாக மொழி 
பெயர்க்க தெரியாதவன் 

ஒரு வலியை 
அதன் போக்கிலேயே 
ஆளத்தெரியாதவன் 
ஒரு துரோகத்தை 
துடைத்து விட்டு 
கடந்து வராதவன் 

வெறுப்புகளின் மேல் 
நிம்மதியாய் 
படுத்துறங்க பழகாதவன் 

தாரளமாகத் 
தூக்கு போட்டுக் 
கொள்ளலாம் 
என்கிறேன் நான் 

ஆனாலும் அவன் இன்னும் 
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் .."

ஒற்றை இறகினில் என்னை பறக்க வைத்த தொகுப்பின் ஆசிரியர் "இரா . பூபாலன்" அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் .. :-) 

Monday 10 August 2015

என திதழ்களை நீ நகல்கள் எடுப்பாயோ உனது முத்தங்களில் ...♥♥

♥SB♥

Friday 7 August 2015

 வெட்கப்பட்டு விலகி செல்கின்றன இந்த காற்றின் துகள்கள்,, ஒரு முத்தத்திற்கான இடைவெளியில்.... ♥+♥ 

♥செந்தில்பாலாஜி ♥

Sunday 2 August 2015

தேவதையாய் ...






தேவதையாய் ...
நீ எந்த  கோலமிட புள்ளிகள் வைத்தாய்.,?
வானத்தில் புள்ளிகளாய் நட்சத்திரங்கள்...!!! 

By 
SenthilBalaji..♥♥