Monday 17 August 2015

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ...

  எதையோ பார்த்து ஆனந்த பட்டு  முதன் முதலில் சிரிக்கும் குழந்தையாய் .. சிரிக்கின்றேன்  உருமீனாய் உளமாறிப்  போன நான் , முதல் கவிதையில் ...

  ஆனந்த பட்டு சிரித்து 5 மாதம் ஆன பின்பு இப்போது தான் சிரித்ததை எழுத துவங்குகிறேன் நான் ..

  ஒரு (சிறந்த) படைப்பு என்பது ஒட்டு மொத்த உலகையோ அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கு , வெற்றிக்கு , உயிர்த்தலுக்கு.. உதவுமெனில்  சான்றே வேண்டாம் ,. அது தலை சிறந்த படைப்பு தான் .!




   ஆம் , உயிர்த்தலுக்கு உதவும் கவிதை கண்டறியப்பட்டால்  அப்பக்கத்தை மடித்து விடுவது என முடிவு செய்தேன் .. தொகுப்பை படித்து முடித்து பார்க்கும் போது, மடிக்கப்படாத பக்கங்கள் பத்தை தாண்டவில்லை .! 

  ஒரு கவிஞனின் மூளைக்குள் கவிதைகள் எவ்வாறு தோன்றியது , ஏன் தோன்றியது, எதற்காக தோன்றியது அந்த கவிதைகள் எழுதப்படும் போது அந்த  பேனா முனை எவ்வாறு தன்னை அர்ப்பணித்து கொண்டது என்பதை சிந்திக்க தூண்டுகிறது .

         " ரௌதிரங்களை உள்ளடுக்கி, ஏக்கங்களை உள்ளடுக்கி,.நம்பிக்கையை உள்ளடுக்கி ,நினைவுகளை உள்ளடுக்கி, இழப்புகளை உள்ளடுக்கி, நீதிகளை உள்ளடுக்கி , காதலை உள்ளடுக்கி,
உண்மைகளை உள்ளடுக்கி ," பறக்க எத்தனித்த இந்த ஒற்றை இறகு, என்னையும் ஏற்றிக்கொண்டு  ஆனந்தமாய் பயணித்து கொண்டு இருக்கின்றது ..  

"ஒரு தனிமையை 
இனிமையாக மொழி 
பெயர்க்க தெரியாதவன் 

ஒரு வலியை 
அதன் போக்கிலேயே 
ஆளத்தெரியாதவன் 
ஒரு துரோகத்தை 
துடைத்து விட்டு 
கடந்து வராதவன் 

வெறுப்புகளின் மேல் 
நிம்மதியாய் 
படுத்துறங்க பழகாதவன் 

தாரளமாகத் 
தூக்கு போட்டுக் 
கொள்ளலாம் 
என்கிறேன் நான் 

ஆனாலும் அவன் இன்னும் 
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் .."

ஒற்றை இறகினில் என்னை பறக்க வைத்த தொகுப்பின் ஆசிரியர் "இரா . பூபாலன்" அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் .. :-) 

0 comments:

Post a Comment