Wednesday 19 August 2015

அழகியலே .. ♥

  
அழகியலே .. ♥



  மிகவும் பிடித்தமானவர்களிடம் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை .. ஆம் இந்த தோழியிடம் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள 20 நிமிடங்கள் காத்திருந்தேன் ..!
பெயர் : "கனல்மதி "
"இப்படிக்கு மழை" என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் . ஒன்பதாம் வகுப்பு மாணவி . ஆச்சரியப்பட வேண்டாம் .. !!!!!!
   ஆம் சென்ற சனிக்கிழமை அதிகாலை 2 மணி க்கு தான் வீட்டுக்கு சென்றேன் . அடுத்த நாள் காலை 9 மணிக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட விழா. நான் எழுந்தது காலை 9.15 மணிக்கு . அவசரமாக கிளம்பி சென்றேன் .

      ஆனால் விழாவிற்கு மிக முக்கியமான நபர் வருவதற்கு சிறிது தாமதம் ஆகும் என கூறினார்கள் அதனால் 10.30 மணி அளவில் ஆரம்பம் ஆனது . மிக முக்கியமான நபரை காண நானும் காத்திருந்தேன் அப்படி யாரும் வரவில்லை.
 
     ஆனால் விழா ஆரம்பம் ஆனது , அந்த நபர் கனல்மதி தான் என்பது பின்பு தெரிந்தது.
     எட்டாம் வகுப்பு படிக்கும் போது தனது முதல் கவிதை தொகுப்பான "இப்படிக்கு மழை " என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். அப்போ இவர் எப்போது முதல் கவிதை எழுதி இருப்பார் என்ற கேள்விக்கு இது வரை எனக்கு  விடை தெரியவில்லை ..!!!!!
   இவர் விழாவில் பேச ஆரம்பித்தார். ஆம் இதுதான் எனது கண்மயிர்கள் சிலிர்த்த தருணம் . பக்குவப்பட்ட பேச்சாளரை போல (இவர் பக்குவப்பட்ட பேச்சாளர் தான் ) 5 நிமிடத்தில் உரையை முடித்து விட்டார்
   ஆம்  அப்படி என்ன பேச முடியும் ..
     குழந்தை பருவத்தில் எப்படி கவிதைகள் எழுத முடியும் என்ற கேள்விக்கு " நான் படித்து கொண்டு இருப்பது , அரசு பள்ளி தமிழ் வழி கல்வியில் , ஆக என்னால் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க  முடிந்தது , மேலும் இந்த சமூகத்தை பற்றி எளிதில் புரிந்து கொண்டேன் என்றார் "  அனேக கைதட்டல்கள் ....
   இரண்டாவதாக "பெரியார் இயல்"  பற்றி பேசினார். 13 வயதில் பெரியாரை பற்றி தெரிவதே அறிது .. ஆனால் "பெரியார் இயல்" பற்றி பேசும் போது அந்த எளிமைக்கு உள்ள வலிமைகளை விளக்கி விட்டார்.
    மேலும் இவர் எழுதிய "இப்படிக்கு மழை " என்ற கவிதை தொகுப்பில் 4 அல்லது 5 கவிதைகள் தான் உருப்படியான கவிதையாம் ... அதை இவரே சொல்கிறார் .. ஏன்  என்றால் 5 கவிதைகள் தான் சமூகத்திற்கு  பயன் படுமாம். மீதி கவிதைகள் அழகியலை அழகாக கூறுமாம்.
 " ஒரு தலை சிறந்த சுய விமர்சனம் இது தான் .."

   ஆக இவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்ட மகிழ்ச்சியில் நான் ...
 

   "இப்படிக்கு மழை" கவிதை தொகுப்பை பெற அழைக்கவும் : கவிஞர் கனல்மதி + 91 9842448175..

0 comments:

Post a Comment