Monday 29 June 2015

வைஸ் வெர்ஸா (Vice Versa):

வைஸ் வெர்ஸா (Vice Versa):
 
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ":

    மன்னர் காலத்தில், அரசாங்க வேலை என்றால் அது மன்னரின் அரண்மனை யில் வேலை, சிறை வாசம் என்றால் அது ராஜ தண்டனை . காலம் மருவியதால் அரசு  வேலை எனவும்  சிறை வாசம் எனவும் ஜோதிடத்தில் மருவியது .

     சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பிறந்தோர்களின் ஜாதகத்தில் , "சுக்கிரன். புதன் , சந்திரன் , சூரியன் ) பெரும்பாலோனோர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது என்பது அரிது . 

சுக்கிரன் , ' அழகு , ஆடம்பரம் ,சினிமா , சொகுசு வாழ்கையை " குறிப்பவர் ,.
புதன் , " கல்வி , வித்தை , பட்ட படிப்பு, ஜோதிடம் , நவக்ரஹ வழிபாடு  " ஐ குறிப்பவர் . 
சந்திரன் " தாய் , கடல் கடந்த தொழில் , வெளிநாடு மற்றும் வேற்று மொழி " ஐ குறிப்பவர் .
சூரியன் " தந்தை , ராஜ சௌக்கியம் , அழகு " ஐ குறிப்பவர் .

 ஆக 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஜாதகத்தில் மேற்கூறப்பட்ட க்ரகங்கள் நல்ல நிலையில் இருந்தால், ஜோதிடர் இந்த ஜாதகன் யோகக்காரன் சொகுசான வாழ்கை , வெளிநாடு வாழ் யோகம் " என கூறுவார் .

 ஆனால் இன்று சற்றே யோசித்து தான் பலன் கூற வேண்டும் . இன்று பிறக்கக் கூடிய ஜாதர்கள் ஜாதகத்தில் மேற்கூறப்பட்ட க்ரகங்கள் நல்ல நிலையில் அதிகளவில் இருக்கின்றன ,.

  அதனால் தான் திரை துறையில் ஜெயிக்க வேண்டும் என்று இளைஞர்கள் பட்டாளமும் , பொறியியல் , மருத்தவம் பட்ட படிப்பு , நவக்ரஹ வழிபாடு இன்  முக்கியத்துவம் , வெளிநாடு வேலை மற்றும் மோகம் , என மக்களின் எண்ண அலைகளும் வேறுபட்டு விட்டது .

  ஏன் இந்த கட்டுரையை எழுதி கொண்டு இருக்கும் நான் கூட வணிகர் குலத்தில் பிறந்தவன் தான் .

எல்லாம் சரி, 90/100 சதிவிகிதம் ஜாதர்கள் மேற்கூறிய அமைப்பில் பிறந்தால் அனைவருக்கும் வேலை, தொழில் மற்றும் சொகுசு வாழ்க்கை கிடைத்து விடுகிறதா என்ன ??? 

  மேற்கூறிய க்ரகங்கள்  நல்ல நிலையில் இருந்தால் இன்று இது தோஷம் உடைய ஜாதகம் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது .

இன்ஜினியரிங் படித்தோருக்கு வேலை இல்லையாம் கூட மணமகள் கிடைப்பது அறிதாம் ..!!

மருத்துவ படிப்புக்கும் இதே நிலைமை சிறிது தூரத்தில்....

பட்ட படிப்பு படித்தவர்களின் நிலை ...??? 

அப்போ 40 ஆண்டுகளுக்கு முன் , விவசாயத்தை குறிக்கும் சனி நல்ல நிலையில் இருந்தார் . அதனால் தான் விவசாயம் செழித்தது .
இனி நம் நாடு எதிர் கொள்ள இருக்கும் விவசாய புரட்சிக்கு சனி நல்ல நிலையில் உள்ள  ஜாதர்கள் அதிக அளவில் தேவைபடுவார்கள் மற்றும் உடல் உழைப்பை கொடுப்பவர்கள் யோககாரர்கள் என்பது மட்டும் உறுதி..

வைஸ் வெர்ஸா ..(Vice Versa) 
காலம் மருவியதால் .. ஜோதிடம் மீண்டும் மருவும் ...

நன்றிகளுடன் 
செந்தில்பாலாஜி DME., 

Thursday 11 June 2015

காக்கா முட்டை :-)







காக்கா முட்டை :-)

     சென்னை யின் அழகிய மேம்பாலத்தின்  கீழ் இருக்கும்  கூவம் நதிக்கரை ஓரத்தில் இருந்து யதார்த்தமாக பயணிக்கிறார்கள் "சின்ன காக்கா முட்டையும் ", "பெரிய காக்கா முட்டையும் " அந்த  அரசமரத்தின் மீது இருக்கும் காகத்தின் முட்டையை குடிப்பதற்காக ...

























   பீசா கடை கட்டுவதற்காக அந்த மரம் இருக்கும் இடம் விற்க படுகிறது, அம்மரம் வெட்டப்படும் சமயங்களில் இருவரின் நடிப்பு அற்புதம் .


   ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் . யதார்த்தமான காட்சிகளுக்கு அனேக கை தட்டல்கள் ...

  பீசா சாப்பிட ஆசைப்படும் குப்பத்து சிறுவர்களின் ஆசை "ஏக்கத்தின் உச்சகட்டம்"

  இறுதியில் மேள தாளத்துடன் பீசா சாப்பிட காரில் வந்திறங்கும் " சின்ன காக்கா முட்டைக்கும்    , பெரிய காக்கா முட்டைக்கும்   "   சபாஷ் !!!!

  "அரச மரம் வெட்டப்படுவதால் ஆஸ்கார் விருது தவறிவிடலாம் , ஆனால் தேசிய விருது நிச்சயம் " 

....SB---

Wednesday 3 June 2015

முதல் "முத்தங்களுக்கு" பின்....





















பூமி,
தான்  தேடுகின்ற
காதல் கதை 
கிடைத்தவுடன் 
மகிழ்ச்சியில் தன் 
சிறகுகளை விரித்து கொண்டு 
விண்வெளியில் 
பறக்க துவங்கிவிடுமாம் ....

நீ எனக்கு கொடுக்கின்ற 
முதல் "முத்தங்களுக்கு" பின்....

காதலுடன் 
♥SB♥ 


Tuesday 2 June 2015

நான்கும்(4) ... நீங்களும்....




நான்கும்(4) ... நீங்களும்....

   இது வேறொரு பரிமாணம். எனது முதல் கட்டுரை ஜோதிடத்தில் ...

    மனம் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மாய உறுப்பு (imaginary organ ). ஜோதிடத்தில் இந்த மாய உறுப்பை லக்னத்தில் இருந்து நான்காம் இடமாக கருதுகிறோம்.

    மனித வாழ்வில் இன்றியமையாதது எனது ஒவ்வொருவரின் விருப்பங்கள் , அதனால் ஏற்படும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் ஒருவரின் வாழ்வியலை தீர்மானிக்கின்றது .

  முதலாவதாக , ஒரு மனித உயிர்க்கு தனது அறிவு மற்றும் உயிரினால் ஏற்படும் ' "மன மகிழ்ச்சியை" லக்னத்தின் பலம் மற்றும் இலக்கின அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .

இரண்டாவதாக , தனது குடும்பம், வாக்கு தனம் போன்றவைகளால் ஏற்படும் "மனமகிழ்ச்சியை" இரண்டாம் இடமும் அதன் அதிபதியும்  ,

   தைரியம்  வீரியம் சகோதரம் போன்றவைகளால் ஏற்படும் "மனமகிழ்ச்சியை" மூன்றாம் இடமும் அதன் அதிபதியின் நிலையும் ,

 குழந்தைகள் மற்றும் குல தெய்வத்தின் மூலம் பெரும் "மன மகிழ்ச்சியை" ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியின் பலம் வைத்தும் ,

 எதிரிகளின்மையினால் மற்றும் தனது மனைவி அல்லது கணவன், இவர்களினால் ஏற்படும் "மன மகிழ்ச்சியை" முறையே ஆறு மற்றும் ஏழாம் பாவமும் அதன் அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .

  தனது உடல் மற்றும்  தந்தை , பாக்கியங்கள் போன்றவற்றில் இருந்து பெறப்படும் "மன மகிழ்ச்சியை" முறையே எட்டு மற்றும் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .
 
  தொழில் மூலம் மற்றும்  லாபங்களின் மூலம் பெறப்படும் "மன மகிழ்ச்சியை" முறையே பத்து  மற்றும் பதினொன்றாம் பாவமும் அதன் அதிபதியின் பலம் வைத்து அறியலாம் .

விரயத்தினால் ஏற்படும் "மன உளைச்சல்களுக்கு" 12ஆம் பாவம் மற்றும் அதன் அதிபதியின்  நிலை பொருது அறியலாம் . 

  "ஆக , மேற்கூறிய அத்தனை மன மகிழ்ச்சிக்கும், மனம் என்னும் மாய உறுப்பு தொடர்பு கொண்டு உள்ளது. "   
 
     ஒரு ஜாதகரின் பலம் என்பது அவரின் லக்னம் மற்றும் லக்ன அதிபதிக்கு எவ்வளவு பங்கு உண்டோ .. அது போல் நான்காம் இடத்திற்கும் அதன் அதிபதிக்கும் பங்கு உண்டு.

    இதுவரை நான் பயிற்சிக்காக பார்த்த ஜாதங்களில் நான்காம் இடத்தை முக்கியமாக கவனத்தில் கொண்டு பார்த்ததில் பலன் மிக சரியாக வந்தது .

  அது சரி , எல்லோருக்கும் எல்லா நிலைகளும் சரியாக அமைந்து விடுவதில்லை . முக்கியமாக நான்காம் இடமும் , நான்காம் அதிபதியின் நிலையம் சரியாக அமைந்தவர்க்கு  வாழ்வியல் இயல்பாக இருக்கின்றது ..  நான்காம் பாவம் கெட்டு விட்டாலோ அல்லது நீசம் அடைந்து விட்டாலோ  கொஞ்சம் சிரமம் தான் . ஒரு வேளை  நீச பங்கம் அடைந்து விட்டால் மிக சிறப்பு .
   
   நான்காம் இடம் என்பது , ஒரு ஜாதகரின் மனதை மட்டும் குறிப்பதில்லை , அவரின் தாயையும் குறிக்கின்றது ..

   ஆக பொதுவாக அனைவரும் , முக்கியமாக நான்காம் இடமும் அதன் அதிபதியும் பலம் இல்லாதவர்கள் பெற்ற தாயை தெய்வம் போல் வணங்கி வந்தால் அவரின் ஆன்ம பலம் மற்றும் பிரார்த்தனைகள் ஒரு ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்ட செய்யும்.

   ஒரு வேளை தாய் இயற்கை எய்தி விட்டால் அவரின் சமாதி  சென்று அல்லது ஆன்மாவை நினைத்து பிரார்த்திக்கலாம் ..  

வாழ்வியலை வெல்வோம் ...

நன்றியுடன் 
செந்தில்பாலாஜி DME.,