Thursday 10 March 2016

நாதிகள் :

நாதிகள் :

"புணர்தலுக்கு 
 பிறப்பு 
சான்றிடுகையில் ..,"

"பிறப்புக்கு 
பின் 
வளர்தலில், 
பாலினம் 
சான்றிடுகையில் ...,"

"வளர்தலில் 
உடலொன்றாய் ,
உயிர்வேறாய் 
உளம் கூறாய் 
பிளக்க,
 
நெஞ்சோடு நீட்டிய 
முலையும் 
மார்போடு மடிந்து போக, 
யோனிக்குள் 
லிங்கமென 
விசித்திரமாய் 
விளம்பி.,
 
புணர்தல் புரியாமல் 
புரிதல் புணராமல், 
அர்த்தமற்ற நாதிகளாய் ..
வீதிக்கு வரும் 
அந்த 
அர்த்தநாரிகளுக்கும் 
அர்த்தம் 
கொடுப்போம் .,
ஒரு சக மனிதனாய் ...! 

இவண் 
♥செந்தில்பாலாஜி ♥


Attachments area
Preview attachment transgender.jpg

Friday 26 February 2016

மகிழ் தருணம்

மகிழ் தருணம் 

" 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , கொடுவாய் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன். பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு இன்னும் இரண்டு மாதம் மட்டும் மீதம் இருக்கையில், " C.P. Radhakrishnan" ஜி எனது வகுப்பிற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார் . 

மீதம் இருக்கும் இந்த இரண்டு மாத காலத்தில் சரியாய் உழைத்தால் , நல்ல மதிப்பெண் பெறலாம் என்பதே இவரின் உத்வேக வார்த்தைகள்.

2007 இல் நான் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற , "C.P.Radhakrishnan" ஜி இன் சிறப்புரையும் ஒரு காரணம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டி இட்டார். இவர் வெற்றி பெற வேண்டும் என்று விருபினேன் ஆனால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இனி எந்த வொரு தேர்தலிலும் , இவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட நான் ரெடிங்க ...!!! 


bY 
SenthilBalaji

LOVE AND LOVE ONLY..

போதையேறிய காற்றின் துகள்கள்...

"கார்ல்ஸ்பெர்ஃக் "பீரின் 
சுவாசத்தில்,
போதையேறிய காற்றின் 
துகள்கள்
திசை தெரியாமல் 
அங்குமிங்கும்
திரிகிறது..
"காதலினால்"..
SB..

whatsapp... kavithai.







"I think this is the wonder

"I think this is the wonder. Obviously I met Mr. Kamal today , who drawn my face with in half an hour. Thanks a lot Mr.Kamal. And also my hearty wishes to you for your upcoming events."
Regards
Senthil Balaji

பரிசளிக்க..

"எனது இரண்டு கைகளையும்
இறகுகளாய் மாற்றிக்கொண்டு
ஒரு பறவையாய்
வின்னில் பறக்க ஆசை,.
ஆம்.,
அச்சிறகுகளை
கீழுதிர்த்து
உனக்கு பரிசளிக்க... "
காதலுடன்
SenthilBalaji..

விஷேசம்

மனதிற்கு பிடித்தமானவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை, ஆம் கடந்த மாதம் கொலுசு மின்னிதழ் நடத்திய தமிழர் திருநாள் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர் திரு. இளவல் ஹரிகரன் அய்யா அவர்கள்.
இவரது பூர்வீகம் வடமாநிலம் , தாய் மொழி "ஷௌராஸ்டிரம்". என்பது விஷேசம். தமிழ் மொழி மீதான இவருடைய பற்றுக்கு வார்த்தை இல்லை. மகிழ்ச்சி.
By
SenthilBalaji
ஒரு பூவாக உருமாறி,
இதழ்களின் சுவாசத்தை
காற்றினில் கலந்து,
நறுமணத்தை
உனக்கு பரிசளிக்க 
ஆசை ..! 
காதலுடன்
SenthilBalaji


CBZ :
Chemistry - Botany - Zoology :
"Yes he speaks the English well. I was surprised and asked about his graduation. That was CBZ & he made his carrier in Auto Rikshaw field , 20 years ago. " I made a very big salute to him & took this clip. "
Venue @ Bangalore ..
Regards
Senthil Balaji

"நீ பிரியப்பட்டால் மீண்டும் பூமிக்கு திரும்பி வருவோம் ..!!!" :

"நீ பிரியப்பட்டால்
மீண்டும்
பூமிக்கு திரும்பி
வருவோம் ..!!!" :♥

''கடந்து விட்ட காலங்களில்
நங்கூரமாய் நினைவாடியது
உந்தன் நினைவுகள் தான் ..!
ஆம்,
நிலவில் இருவரும் கால்
வைப்போம் வா ..!!
காதல் இல்லாத தேசத்திற்கு
காதலை சொல்லி கொடுப்போம் ..!!
மொழி இல்லாத இடங்களில்
கவிதைகள் சொல்லி கொடுப்போம் ..!
பால் வீதியில் நடந்து செல்வோம் ..!
நீ பிரியப்பட்டால்
மீண்டும்
பூமிக்கு திரும்பி
வருவோம் ..!!!
இனி கடந்து போகும் காலங்களில் ..!! 
காதலுடன் 
♥SB

தேடுகின்றேன்..

ஏனோ ஒவ்வொரு முகத்திலும், உனது கண்களைத் தேடுகின்றேன்.. 
காதலுடன்.
SB..


உனது கண்களை பார்க்க
கரை தாண்டியவன் ,- நான்
காதலுடன்
SB

ஒரு மச்சத்தை...

அழகிய கண்களை
உனக்கு வரைந்து
பொருத்திய பின்
திருஷ்டிக்காக
ஒரு மச்சத்தை
உனது கன்னங்களில்
பிரம்மன் வைத்திருப்பான்
என நம்புகிறேன்...
காதலுடன்
SenthilBalaji..

வீரன்

தன் கோபக் குருதியினை
மழைத் துளிகளாக்கு
தோற்றாலும்
நீ
வீரன்தான்..

கோபங்களுடன்..
SenthilBalaji.

அர்ச்சனை செய்..,

செந்நீரால்
அர்ச்சனை செய்..,
காவு வாங்க
கால தாமதம் ஏன்..
கோபங்பளுடன்
SB..

கலாய் தினம்.. சாரி காதலர்தினம்.. ங்க..







கலாய் தினம்.. சாரி காதலர்தினம்.. ங்க...
" நாளைக்கு தங்கச்சி தரணிக்கும், மச்சான் சசிக்கும் கல்யாணம், இப்போ ரெண்டு பேர்த்தயும் "ப்ரோபோஸ்" பண்ண வச்சு செமயா கலாய்ச்சமுங்க... இதுல ஹைலைட்டே என்னன்னா வெட்கந்தானுங்க... wink emoticon SB

என்னங்க...?

நாளை காலை
பூத்துவிடும் என்கிற
நம்பிக்கையில்
இன்றே தண்ணீர்
ஊற்றுவது....
என்னங்க...?
SB..

கத்திக் கப்பலடி

கத்திக் கப்பலடி
உன்
விழிப் பார்வ,
என்
இதயத்த
கிழிக்குதடி..
SB..

பொறாமைதான்....

உன திதழ்களுக்கு
முத்தமிட்ட
அம்மழைத் துளிகளின்
மீது எனக்கு
பொறாமைதான்....
SB..

மனையாளிக்கு... நிஜம் ..

தங்கத் தராசில்
கரம் மாறுகிறது
கார்த்திகைப் பெண்,
கைநழுவலில்
விக்கி நிற்கும்
பிறந்த வீட்டின்
சுதந்திரமும்,
நீர் துளியில்
நிரம்பி நிற்கும்
கண்களும்,
புகும் வீட்டுக்கு
கைகொடுக்கும்
தருணத்தை
ஏனோ தாமதிக்கின்றது.
வெண்ணிற சிதறுகளில்
செந்நீரின் சேகரிப்பில்
கழியும் அக்கணத்தில்
வெம்பி நிற்கும்
புன்னகைக்கு பின்,
அந்த தங்க தராசின்
கணம் கடினமாய்...
ஒரு கார்த்திகை பெண்ணிற்கு.,
மன்னிக்கவும்
ஒரு மனையாளிக்கு...
நிஜங்களுடன்
செந்தில்பாலாஜி்.

பாலகுமாரா...!!!!

அன்றிலாய்
விண்ணில்
பறப்பாயென
ஆசைப்பட்டாயே
பாலகுமாரா...!!!!
காதலுடன்
SB..

எதை எழுத..."

"கவிதையே
நீ
எனில்
நான்
எதை
எழுத..."
காதலுடன்
செந்தில் பாலாஜி
இரு
ஒற்றைக் காலினில்
ஒரு
தவம்..
இரவு வணக்கங்கள்...
SB..

காதல் கிரகணம்

"என்னை
கிரகணம்
செய்தாயே
உந்தன்
கண்களில்..."
காதலுடன்
SB

கேட்கிறாயா!!???...



அம்மிணி ஒரு நிமிஷம்...
நான் ஒரு கவிதை சொல்றேன் கேட்கிறாயா!!???...
SB

Its a Ridiculous.

Its a Ridiculous. Yes , I was surprised with his quote " The World Is My Country". Six or Seven years back, I met him and discussed about his vision. Very ridiculous, So am invited him for a guest lecturing in my college third year. Very pleasant moments and we had a nice experience with him.
Am highlighting lot of thanks to the college Secretary Sir , Mr. Chinnasamy for kind co- operation for this schedule.
His name is Mr. Gaspher Orehek., from sluvenia , lives in Cuddalore - India and his contact number is 9488103848 .
Regards
SenthilBalaji..
விறகாகும் முன்
துளிர் விடுவாயென...
SB..

ஒலிம்பிக் வெற்றி


"பதட்டத்துடன் கரம் கோர்த்து
சாலையைக் கடந்தபின் ,
புன்னகைக்கும் விழிகளில்
ஒரு ஒலிம்பிக் வெற்றியின்
மகிழ்ச்சி - குழந்தை பருவத்தில்.."
SB...

" இக்கணத்திலிருந்து..



" இக்கணத்திலிருந்து
23 ஆண்டுகள்
முன்னோக்கிச் சென்று,
வேறொரு லிங்கத்தினிலிருந்து
வேறொரு யோனிக்குள்...,
உன்னை மணம்புரிய
மனப் பொருத்தத்துடன்
ஜாதிப் பொருத்தமும்
கூடிய
ஆண்மகனாய்
பனிக்புடம் புக
என்ன தவம் செய்வேனோ...????"
காதலுடன்
Senthil Balaji

பயத்துடன்

ஏங்க. , விஜய் நடுச்ச, " மதுர" படம் பாத்தீங்ளா...?
ஏம்பா..??
இல்லீங்க.. அந்த படத்துல "25 ரொபாய்க்கு " செல்போனுன்னு வில்லன் கூவி கூவி வித்துருப்பாரு..
ரிங் அடுச்சா செல் வெடிக்கும் அந்த படத்துல...
இப்ப அதை ஏம்பா.., செல்ர???
இல்லீங்க, 251 ரொபாய்க்கு செல்போனாமா...!!!! " ரிங்கிங் பெல்ஸ்" பேராமா!!!???
பயத்துடன்
SB,..

அம்மிணி ,,,

அம்மிணி ,,,
நீ வருவேனு தெருவுல கூட நின்னு பாக்கலாம், யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க... பேசவும் மாட்டாங்க.,
ஆனா, இந்த _Facebook LA காத்துக்கெடந்தா ஏதேதோ பேசுவாங்க போல...,
என்னம்மிணி பண்றது..???
ஏங்க நான் சொல்ரது உண்மைங்ளா..??
SB..

"பிரசவத்தில்"..

அழுகையும்
புன்னகையும்
புலம் பெயர்ந்தன
தாய்க்கும்
சேய்க்குமான
"பிரசவத்தில்"..
ஆம்.,
உனக்கும்
எனக்குமான
" காதலிலும்"
கூட............
தப்பில்லை...
காதலுடன்
SenthilBalaji..

வெறும் கூடாய்



வெறும் கூடாய்
ஒரு கவிதை
சொல்கிறேன்...
SB..

முதல் கவிதை..



முதல் கவிதை..
முதல் மழைத் துளியில்
நனைந்த மண்துகளுக்கும்,
முதன் முதலில்
காதலை உணர்ந்த
அந்த இதயங்களுக்கும்,
குழந்தையை பெற்றெடுத்த
தருணத்தில்
ஒவ்வொரு தாய்க்கும்,
கணவனை இழந்த
பொழுதுகளில்
ஒவ்வொரு கைம்பெண்
விரல்களிலும்,
விரல்கள் சிவக்கும்
வறுமையின்
நொடிகளிலும்,
முதல் முத்தத்துக்கு
பின் உள்ள
சுவாசங்களின்
தூரல்களிலும்,
ஒரு கவிதை
"முதல் கவிதையாய்"
ஒவ்வொருவரிடத்திலும்...
By
SenthilBalaji..

கொடுமை

"கோடை வெயில்
கொடுமை
தான்..
தாகத்திற்கு
உனது 
முத்தங்கள்
கிடைக்காதவரை ..."
SB

காக்கா மூக்கு :



காக்கா மூக்கு :
"தலைப்பை பார்த்து சிரிக்க வேண்டாம். காகம் சனியின் வாகனம். சனியின் பாதிப்புகள் அதிகம் இருந்தால் காகத்திற்கு ஏன் சாப்பாடு இட வேண்டும்??
காரகத்துவம் கணிக்கப்படுவது என்றால்.. அக்கிரகத்தின் கதிர்வீச்சுகள் அப்பொருளை அதிக அடர்த்தி (Density) கொண்டு ஆளும்.
சனியின் கதிர்வீச்சுக்கள் பூமியினில் காகத்தை அதிகளவு ஆள்கிறது.
அக்கதிர்கள் , காகத்தின் மூக்கினில் உள்ள இரு துவாரங்களினுள் உட்புகுந்து சேமிக்கப்படும்.
நாம், உணவளிக்கும் போது அம்மூக்கினுள் இருந்து கதிர்வீச்சுக்கள் நம் மீது பிரதிபளிக்கும், அப்போது நம்மீது பாசிட்டிவ் எனர்ஜி உருவாக்கப்பட்டு மனதையும் உடலையும்., பஜ்ச பூதங்களுடன் சரிவர இயக்கும் என்பது அறிவியல் விளக்கம்.
Note: தற்சமயம், விருச்சிக ராசிக்கார்ர்கள் காகத்திற்கு உணவளித்தால் ஜென்ம சனியின் பாதிப்புகளில் இருந்து சற்றே தப்பிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
நன்றிகளுடன்
செந்தில் பாலாஜி..


வருங்கால இயக்குநர் , சதீஸுடன் நான்....
"பயபுள்ள என்னம்மா கதை எழுதுறான்......"
அடுத்தவாட்டி வரும் போது லவ் ஸ்டோரி சொல்லனும்னு சொல்லிருக்கேன்..
லவ்னா என்னன்னு கேட்டுப்புட்டான்...?????
wink emoticon
மகிழ்ச்சியுடன்
SB.....
அம்மிணி ஈட் வெல்....... 
SB..

:-)


மகிழ் மனம் ♥

பொள்ளாச்சி இலக்கிய வட்ட செய்திமடலில் , வெளியான எனது கவிதை

பொடக்காளிக்கு பின்னாடி
காலைல ஆறு மணிக்கு போனா..
ஊரே அந்த எலந்தமரத்தடில தான் இருக்கும்...
......சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னாள்...
SB..

ஆழம் ♥

வந்த வழி தெரியாமல்
ஆழமாக சென்றுவிட்டாள்,
எந்த வலியும் வலி இல்லை
இந்த வலி தான் கொடியதோ,?
காதல் " விழி" நீரின் விலையும்
மருந்தும் தான் என்னவோ??
காதலுடன்
SB..

"நீ , நெருப்பு

"நீ , நெருப்பு
நான் , நீர்
நிலம்
காற்று
ஆகாயம்.."
SB..

தாழ்

"தாழிட்ட
பின்பு ,
தாழம்பூ
கீழுதிர,
உனது
வெட்கத்தை
முறியடிக்க
எனது
முத்தங்கள்
தாளமிட,
மீதமேதுமின்றி
மீள்வோம் என ....!!"
கனவுகளுடன்
SB.

தானம்

தானம் :
"தன் கூட்டம் 
உண்டது போக ,
விதைத்த 
விவசாயிக்கும் 
விதைகளை
மிச்சம் வைக்கிறது
- எறும்புகள் .."
--SB..

இசை

அம்மிணி..
"எனக்கு வீணை
வாசிக்க தெரியாது,
ஆனால்,
பழகிக்கொள்வேன்.,
உன்னால்
இவ்வளவு சப்தங்களுக்குள்,
என திசையை
கேட்க்க முடியுமாயேனால்..!!!
காதலுடன்
SB..
மனம் மாறிய சாதி - காதல்.. SB..

தியானம்



ஆடாமல்
அசையாமல்
தியானிக்கிறேன்...
...SB--

பார்வை

  அம்மிணி,
"45வது பாகையில்
உனது விழிப்பார்வை
என் மீது விழுமானால்
காதல் என கவிதை கூறலாமா??"
காதலுடன்
SB

தூக்கம் ..

   "எனது செல்ஃபோனும் , என்னுடன் சார்ஜ் இல்லாமல் தூங்குகிறது, உந்தன் நினைவுகளில்....''
காதலுடன்
SB..♥

பிம்பம்

    "1992 ஆம் ஆண்டு , ராஜீவ் காந்தியை குண்டு வைத்து படுகொலை செய்த தருணத்தில் , அருகில் இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் "நளினி, முருகன் , சாந்தன் , பேரறிவாழன் " ஆகியயோர். அதுவும் இவர்கள் அனைவரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடந்த புகைப்பட கருவியில் தெரிந்த அப்பாவி உருவங்கள் என்பது யாவரும் அறிந்ததே ..!
இரண்டு நாள் முன்பு, தனது தந்தையின் இறுதி சடங்கிற்கு பரோலில் வந்த நளினி அவர்களின் செய்தியை இணையத்தில் பார்க்கும் போது சற்றே மனம் வருந்தியது.
உண்மையான குற்றவாளிகள் யார் ? ராஜீவ் படுகொலைக்கு பின் யார் எல்லாம் சதி திட்டம் தீட்டினார்கள்.?? தெரிந்தாலும் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது.
எனது கேள்வி என்ன வென்றால் .., ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த மூன்றடுக்கு பாதுகாப்பை ஏன் , படுகொலை செய்யும் இரண்டு நாள் முன்பு நிராகரித்தார்கள்..???
அமெரிக்க உளவுத் துறைக்கும் , சுப்ரமன்யசாமிக்கும் என்ன தொடர்பு...??
இத்தாலிய குடும்பதிர்ற்கும் (காங்கிரஸ் ) , தமிழனுக்கும் ( பிரபாகரன் ) என்ன பிரச்னை.
இத்தாலிய குடும்பத்தினர் , நம் தமிழ் இனத்தை ஈழத்தில் அளித்தது ஏனோ ??
இது போன்ற பல கேள்விக்கு , இன்னும் தமிழக இளைஞர்களுக்கு விடை மட்டும் இல்லை கேள்வியே தெரிய வாய்ப்பில்லாமல் , வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
"நளினி, முருகன் , சாந்தன் , பேரறிவாழன் " ஆகியோருக்கு நீதி கிடைக்க இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மூத்தோர்கள் ஆகிய நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது எனது அவா ..!!!
இவண்
செந்தில்பாலாஜி ..