Saturday 13 December 2014

ஒரு நாள் :

சின்னஞ்சிறு வயதினிலே :-)

 ஒரு நாள் :
  இன்னும் இரண்டு நாள் மீதம் இருந்தது, ஜனவரி 26 அன்று  பள்ளி (கொடுவாய் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ) ஆண்டு விழா விற்கு "படுகர் நடனம் " (நீலகிரி மலை வாழ் மக்களின் பாரம்பரிய மொழி ) பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் . தமிழாசிரியர் திரு. குமார்  அவர்கள் என்னை கூப்பிடுவதாக நண்பன் சொன்னான். நான் எந்த தப்பும் பண்ணலையேன்னு மனசுல யோசிச்சுட்டே அவரை பார்த்த போது , இந்த நாடகத்திற்கு ("திருவிளையாடற் புராணத்தில் வரும் , சிவ பெருமான் கால் மாறி ஆடிய படலம்") வாயிற்காவலனாக நடிக்கும் படி, வசனத்தை( ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட ராஜ  கம்பீர , ராஜ குல திலகம் , ராஜசேகர பாண்டியன் வருகிறார்.... பராக் பராக் ...) எழுதி கையில் கொடுத்து விட்டார் .   

     இரண்டு வரி தானே மனபாடம் பண்ணி நடுச்சரம்லாம்னு நெனச்சேன். அன்று மதியம் நாடக ஒத்திகை பள்ளி முதல்வர் முன்பு நடந்தது.

   ஒத்திகை முடிந்த சிறிய நேரத்தில் மீண்டும் தமிழாசிரியர் அழைத்தார், எட்டு 8 பக்கத்தை என் கையில் கொடுத்து படித்து பார்க்க சொன்னார் ,. அட இது நம்ம ராஜா வோட வசனங்கள் சார் னு  சொன்னேன். ஆமா நாளை மறுநாள் நடக்குற ஆண்டு விழா- ல நீதான் இந்த ராஜா வா நடிக்க போற னு சொன்னார். 
   எட்டு பக்க வசனங்கள பாத்துட்டு ,என்னால முடியாதுங்க சார் னு சொல்லிட்டேன். ட்ரை பண்ணி பாருன்னு சொல்லி கிளாஸ் க்கு போக சொல்லிட்டார். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரல, படுச்சா  மனசுல ஏறல. அடுத்த நாள் , மீண்டும் ஒத்திகை பள்ளி முதல்வர் முன்பு , இன்னும் ஒரு நாள் மட்டும் மீதம்   இருந்தது. 

    கூட்டத்தை பார்த்ததும் படிச்ச வசனங்கள் எல்லாம் மறந்துருச்சு, ஒத்திகை இன் போது எனது வசனங்கள் அனைத்தும் தமிழாசிரியரே வாசித்து விட்டார் . ஒத்திகை முடிந்த பின்பு என்னை நல்லா திட்டுவார்னு நெனச்சேன் ஆனா என்கிட்ட வந்து நல்லா  நடுச்சேன்னு சொன்னார் . நாளைக்கு நடக்குற ஆண்டு விழா ல நல்லா பண்ணிருன்னு சொல்லிட்டார் . என்னால முடியாதுங்கனு சொன்னேன் , ஒரு பத்து நிமிஷம் என்கிட்டே தனியா  பேசினார். நீ மொதல்ல ராஜ சேகர பாண்டியன ஒரு கேரக்டரா பாக்காத , ராஜ சேகர பாண்டியனா நீ மாறு ., உன் மனசுல அந்த கேரக்டர ஆழமா பதிய வை , நாளைக்கு நாடகம் முடியற வரைக்கும் நீ, நீ இல்லை "ராஜ சேகர பாண்டியன்" ஆ வாழு நு சொன்னார் . 

     அடுத்த நாள் மாலை 6 மணிக்கு ஆண்டு விழா ஆரம்பம் ஆய்ருச்சு . எனது நாடகத்திற்காக நான் மேடை ஏறும்போது சரியாக மணி 7, 
கம்பீரமான நடையுடன் , " அமைச்சரே , நாடும், வீடும், நகரும் நலம் தானே ? , மக்கள் சுகமா ? , மாடு கன்றுகள் சுகமா ?, மாதம் மும்மாரி பொழிகின்றதா .?., எனது வினாக்களுக்கு விடை பகிருங்கள் .." னு  ஆரம்பிச்சு வெற்றிகரமா முடுச்சுடேன்.

     தமிழாசிரியர் குமார் நாடகம் முடியும் வரை நீ ராஜ சேகரனா வாழு நு சொன்னார். ஆனால் இன்னும் அந்த ராஜ சேகர பாண்டியன் இதயத்தின் ஓரத்தில் இன்னும் சாகாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.  நன்றி தமிழாசிரியர் திரு .குமார் அவர்கள்.

ஞாபங்களுடன் ..
♥SenthilBalaji♥

Wednesday 19 November 2014

ஒரு மெய் :

ஒவ்வொரு தாய்மைக்கும் சமர்ப்பணம் :

"நான்கு யுகமெனின் ,
தேகத்துள் தேகம் சுமந்தாள்,
நாழிகைகள் நறுக்கும்
ஆயிரம் தருணங்களில்,
இத்தருணம் மட்டும்
இவளுக்கு இன்பங்கள்.
மெய்கள் மறுக்காத மெய்கள் ..

----தாய்மை ......

By ♥SenthilBalaji♥


Friday 19 September 2014

காதல் அலையாய்...

காதல் அலையாய் ...

"முன் ஆறு,
மண்ணில், நீ ..
விதைத்தவன் 
விதையானான் ..!
கலங்கிய 
கண்மணியாய், 
நெஞ்சில் சுமந்து 
காதலி யானாய் ..!
வேதம் மாறும் 
நிசப்தங்களில் ,
காதலை இழந்தாய்  நீ ..!
காலம் போட்ட  
தாளத்தால்,
கரம் மாற நின்றாய் நீ ..!
நிற்கும் நாழிகைகளில் 
நின் பாதம் வலித்திடவே 
அமர்ந்தாய் நீ ..
கலங்கிய நதியாய் ..!
"காதில் கேட்டவன், 
காதல் கொண்டான்
வேதம் மாறும் 
காதலை, 
காதல் அலையாய் 
அள்ளி தருவாயென ....!

காதலுடன் 
♥SenthilBalaji♥ 

Thursday 18 September 2014

காலங்கள் :-)

   
காலங்கள் :-) 

    சில ஆண்டுகள் கழித்து, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் வெள்ளைசாமி அய்யா அவர்களை "GVG" மைதானத்தில் சந்திக்க நேர்ந்தது, கல்லூரி படிப்பின் போது எனது முழங்கை அறுவை சிகிச்சை க்கு பின்பு அன்பு கூர்ந்து உடற்பயிற்சி சிகிச்சை அளித்தார். அவரது இந்த அறுபதை தாண்டிய வயதிலும்,ஒரு இருபது வயது இளைஞன் - ஐ போல் உடற்பயிற்சி செய்கிறார் . எனது லேசான தொப்பை யை பார்த்து இன்று,  இன்னும் ஒரு மாதத்திற்குள் தொப்பை யை (லேசான ) குறைக்கும் படி அன்புக் கட்டளை இட்டதோடு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வைத்து விட்டார்.கல்லூரி காலங்கள் கொடுத்த பொக்கிசங்களில் இதுவும் ஒன்று. மீண்டும் ஒரு முறை அதே கல்லூரி இல் , அதே வருடத்தில் , அதே நட்பு வட்டங்கள் மற்றும் ஆசிரியர் வட்டத்துடன் படிக்கும் காலங்களை கற்பனையில் கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருக்கிறது .   அன்புக்கு நன்றி . :-)

இவண்,
செந்தில்பாலாஜி . 

Friday 25 July 2014


















♥♥
"நீ அழுகின்றாய் ...
உறங்கிக்கொண்டு இருந்த என்னை 
எழுப்புகின்றாய்..
இடியும் , மின்னலுமாய் ..,"

"சட்டென்று விழித்த நான் 
உடலை விட்டு 
உயிரை எடுத்து கொண்டு ..

விழுகின்ற மழைத்  துளிகளை 
கயிறாக திரித்து 
மேகத்தின் மேல் ஏறி ,

உனைக் காண்கிறேன் 
நீ சிரிக்கின்றாய் நிலவாய் ...."

உனது சிரிப்பை ரசிக்கின்றேன் ..
இனி உடலோடு என் உயிர் 
ஒட்டாது  என்பதை அறிந்தும் ...♥♥

காதலுடன் ..
♥S BALAJI♥

Tuesday 22 July 2014



 இப்படிக்கு நான் ,

" பதின் வயதில் படிப்பறியா 
பறவைகளாய் .."

" வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ,
பிட்டுக்கு மண் சுமந்தோம் ....!"

"நாங்கள் சுமந்த மண்ணும் , கல்லும்
எங்களை நெஞ்சோடு அணைத்து கொண்டது ..!"

" கல்லில் அறை கட்டிய எங்களுக்கு,
கல்லறை கட்டிவிட்டது ...!"

-- இப்படிக்கு நான் ....
கல்லறையில் எழுந்தவன்

( கட்டிட விபத்துகளில் இறந்த வட மாநிலத்தவர்க்கு சமர்ப்பணம் ..!)

By
Senthil Balaji.

 சின்னஞ் சிறு வயதினிலே 

"காலை வரும் முன் கூடையில் குவிந்தன நாவல் பழங்கள்.. கிழக்கு தோட்டத்து நாவல் மரத்தை சுற்றி , குருவிகளோடு குருவிகளாக நாங்களும் ../ ஆடி காற்றில் கோடை மழை யில் நனைந்து கொண்டு நாவல் பழங்களை சேகரிப்போம் ...

பள்ளிக்கு எடுத்து சென்று நாவல் பழம் அறியா நண்பர்களுக்கு சுவை ஊட்டிய அந்த காலங்கள் ...

ஆனால் இன்று அந்த கிழக்கு தோட்டத்து மரமும் இல்லை , சுவடுகளும் இல்லை .. 1 கிலோ நாவல் பழம் = 240 ரூபாயாம் ..

நினைவுகளுடன்
 SenthilBalaji♥



தெய்வத்திருமகள்: 
"அணுவாய் ஆயிரம் கோடி இல் வென்றது யாரை வெல்வதற்கு ..??"

by 
..செந்தில்பாலாஜி ..

Sunday 20 July 2014

♥மன யுத்தம்♥ :

மன யுத்தம் :

"எவர் கண்களுக்கும் தெரிவதில்லை , இந்த போரும் போர்க்களமும் ..உந்தன் காதலும் , காதல் கொண்ட என் மனமும் ..

காதலுடன்
S BALAJI

Friday 18 July 2014

♥ தீ♥

முதல் தீ யை 
பற்ற வைத்தாய் ..
இன்று வரை 
காதல் "ஈ" (காதலி) யாய் 
மொய்க்கின்றாய் என் மனதில் ..

முழுவதும் எரியும் முன்,
என் முன் வாராயோ ???

காதலுடன் 
♥S BALAJI♥