Friday 18 September 2015

இனித்தல் ..


"நான்கு நாள் முன்பு எனக்கு இரவு 11 மணிக்கு அழைப்பு வந்தது ..
ஹலோ யாருங்க ..?
தம்பி பாலாஜி ..
ஆமாங்க ... நீங்க ..?
நான் யார்னு எதுக்கு உனக்கு ., எனக்கு கல்யாணம் வெள்ளிகிழமை மதியம் மண்டபத்துக்கு வந்துரு ...
என்று உரிமையுடன் சொன்னார் ..
அந்த தொலை பேசி குரலை மூளையில் செலுத்தி யார் என்று பார்த்ததில் "கொடுவாய் சரவணா மெடிக்கல் சரவணன் அண்ணன் "
ஆச்சர்யத்து போனேன் .. 4 ஆண்டுகள் ஆகி இருக்கும் அவரிடம் பேசி .. அவரது திருமண அழைப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியது .. சில நேரம் அவரை கலாய்த்து விட்டு திருமணத்தில் பார்ப்போம் என்று கூறினேன் .

இன்று காலை கொடுவாய் க்கு பைக்கில் கிளம்பி , சரியாக மதியம் 1.30 மணி அளவில் அவினாஷி பாளையம் பக்கத்தில் உள்ள மண்டபத்தை அடைந்தேன்.
மேடைக்கு சென்று மணமக்களுக்கு திருமண வாழ்த்து சொன்னேன்.. வாழ்த்துக்கு நன்றியுடன் " உனக்கு எப்போ பாலாஜி கல்யாணம் ?" என கலாய்க்க ஆரம்பித்தார் மணமகன் ... வெட்கப்பட்டுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கும் போது ..
எனது பள்ளி தமிழ் ஆசிரியர் திரு குமார் அய்யா அவர்கள் மேடை ஏறினார்கள் .. அதிசயித்துப் போனேன் மகிழ்ச்சி யுடன் வணங்கி இருவரும் நலம் விசாரித்தோம் ...
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம் ..நிறைய பேசிக்கொண்டு இருக்கையில் பள்ளியின் தாளாளர் துரை ஜி அவர்களும் வந்தார் நலம் விசாரித்தோம் .. திருமண விழா விற்கு பின் பால்ய சிநேகிதர்களை சந்தித்து விட்டு மகிழ்ச்சியாக பொள்ளாச்சி வந்தேன் ... ஒரு மகிழ்ச்சியான நாளை அனுபவித்த மகிழ்ச்சியில் ..."""
--செந்தில்பாலாஜி ...
தமிழ் ஆசிரியர் திரு குமார் அவர்களுடன் ...

0 comments:

Post a Comment